Sep 18, 2012

முத்தத்'தீ'



 
 
நீ தீண்டிய

நொடிப் பொழுதின்

பார்வை முத்தத்தில்

விழியைப் பறித்து தீ

மூட்டிச் சென்றாய்...


நெற்றிப் பொட்டில் இட்ட

ஆசை முத்தத்தில்
உச்சம் குளிர்ந்து

கார் முகிலும் தூருகிறது நம் மேல்.


உச்சந் தலையில்

நீ தீண்டிய இன்ப முத்தம்

உடலைக் கரைத்து

உள்ளம் குடித்து

உணர்ச்சியால் தீப் பற்றச் செய்யுதடி


கன்னத்தில் இட்ட காதல் முத்தம்

காதலினால் கன்னக்

குழிகளை நிரப்பி

ஜீவ நதியாய் பெருகச்
செய்யுதடி...


உதட்டைத் தீண்டிய மோக முத்தத்தில்

உதட்டு ரேகையில்

முத்த ரேகையும், ஆயுள் ரேகையும்

மொத்த ரேகையாய்

பரவச் செய்து

பரவசம் செய்யட்டுமே!!!



வெற்றிவேல்





முகப்புப் புத்தகத்தில் போட்டிக்காக எழுதியது, படித்து எப்படி உள்ளது என்று கூறுங்கள் நண்பர்களே....

16 comments:

  1. mmm.........முத்தத்தில் போட்டியா முகப்புத்தகத்தில் போட்டியா???!!!நல்லாயிருஙப்பா.....!

    ReplyDelete
    Replies
    1. முகப்புத்தகத்தில் மட்டுமே போட்டி, இன்னும் முத்தத்தில் போட்டி போட்டி போடற அளவுக்கு இன்னும் வளரலன்னு நினைக்கறேன்...

      தங்கள் வாழ்த்துகள் இருந்தால் எப்போதும் நல்லாருப்பேன் தென்றல்...

      நன்றி வணக்கம்...

      Delete
  2. முத்தத்துக்கு ஒரு முத்தமிடுகிறேன்....
    அழகாக இருக்கிறது நண்பரே...கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய முத்தத்திற்கும் மிக்க நன்றி நண்பா...

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. ச்ச..................ஒரே வெக்கமாயிருக்கு.தமிழ் வந்தால்தான் நிறையச் சொல்லுவா இந்தக் கவிதைக்கு.ஒரே முத்தச் சத்தம்.தமிழ்கிட்ட சொல்லி ஒரு பொண்ணு பாக்கச் சொல்லணும் சீக்கிரமா !

    ReplyDelete
    Replies
    1. சீக்ரம் சொல்லுங்கோ!!! அந்த நல்ல காரியத்த சீக்ரம் செய்ய சொல்லுங்க...

      நன்றி வணக்கம்...

      Delete
    2. தம்பி ரெடியாத்தான் இருக்கிறார்....மக்களே கவனியுங்கோ !

      Delete
  4. அருமை மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  5. ...ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா... எங்கு இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன், வந்துவிட்டீர்கள்...

      நன்றி வணக்கம்...

      Delete
  6. முத்தத்தில் இத்தனையா...? உம் நடத்துங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எத்தனையோ உள்ளது நண்பா... நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  7. தம்பி, முத்தத்தில் 1 பார்வை.2 நெற்றி .3 உச்சம்தலை 4 .கன்னம் .5 உதடு .இன்னும் எந்த இடம் உள்ளது.....மொத்தத்தில் நனறாகா..உங்கள் பதிவு அய்யா ....அன்புடன் கருப்பசாமி...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஏராளம். தங்களுக்கு அதைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...