Oct 1, 2013

நானும் வண்ணத்துப் பூச்சியும்...

அவள் இதழ்களை
மலர் இதழென எண்ணி
தேனெடுக்க அமரவரும்
வண்ணத்துப்பூச்சி.

விட்டு விட்டு
சிமிட்டிக்கொண்டிருக்கும்
கண் இமைகளை
தன் ஜோடியின் இறக்கையென
நினைத்து காதல் பேச
அவளையே
சுற்றிக்கொண்டிருக்கிறது...

நான் மட்டும்தான்
அவளையே
சுற்றிக்கொண்டிருக்கிறேன் என 
நினைத்துக்கொண்டிருந்தேன்...

பாவம்...!
வண்ணத்துப்பூச்சிக்கும்
விதிவிலக்கில்லை போலும்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




40 comments:

  1. //தன் ஜோடியின் இறக்கையென
    நினைத்து காதல் பேச
    அவளையே
    சுற்றிக்கொண்டிருக்கிறது...// அட அட
    இனிய கவிதை வெற்றிவேல்!
    இதைப்போல நான் எழுதிய ஒரு கவிதையின் இணைப்பு தருகிறேன்..
    http://thaenmaduratamil.blogspot.com/2013/01/unnai-paarththa-vinadi.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      தங்கள் கவிதையை படித்தேன், அழகான கவிதை... வாழ்த்துகள்..

      Delete
  2. mmmm....

    piramaatham....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனி,

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. நல்லதோர் கற்பனை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் வருகைக்கும் இனிய பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. ஏமாற்றங்கள் மட்டும் வாழ்க்கையல்ல. நன்றிகள் தம்பி தமிழ்த்தாய் வானொலிய இணைத்தமைக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. //வண்ணத்துப்பூச்சிக்கும்
    விதிவிலக்கில்லை போலும்...!/

    பாவம் வண்ணத்துப்பூச்சியும் வெற்றிவேலும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆவி அண்ணா...

      பாவம் தான். உங்களுக்குப் புரியுது, அவுங்களுக்குப் புரியமாட்டங்குதே...!

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  6. சிறகடிக்கும் மனதுக்கு வண்ணத்துப்பூச்சி நல்ல உவமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள். பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா.

      Delete
  7. வண்ணத்துப்பூச்சி போட்டியா...? ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  8. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மன வாக்கிற்கு மிக்க நன்றி அண்ணா... உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி...

      Delete
  9. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
    Replies
    1. அழகான படைப்பு அண்ணா..

      Delete
  10. ரசிக்கும்படியான காதல் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சௌந்தர்,

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...

      Delete
  11. கண் இமைகளை தன் ஜோடியின் இறக்கையென நினைத்து காதல் பேச அவளயே சுற்றிக்கொண்டிருக்கிறது அழகான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவி நாகா அண்ணா,

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. வண்ணத்துப் பூச்சியும் விதிவிலக்கல்ல....

    படத்தினையும், படத்திற்கேற்ற கவிதையையும் மிகவும் ரசித்தேன்.

    பாராட்டுகள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் அண்ணா,

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுகள் தான், மேலும் எழுத தூண்டுகிறது... மிக்க நன்றி.

      Delete
  13. இதழில் கவிதை எழுதும் வண்ணத்துப்பூச்சி..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  14. Anonymous11:32:00 AM

    வணக்கம்
    வெற்றிவேல்

    கவிதையின் வரிகளில் கதால் இரசம் ஓடுது கவிப்பா அருமை வாழ்த்துக்கள்.....தம்பி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாங்க...

      Delete
  15. //விட்டு விட்டு
    சிமிட்டிக்கொண்டிருக்கும்
    கண் இமைகளை
    தன் ஜோடியின் இறக்கையென........//

    என்ன ஒரு ஒப்பிடுதல்... !
    கற்பனையும் வரிகளும் அற்புதம்!...

    அழகிய கவிதை வெற்றிவேல்..
    வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா,

      தங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி... இதுபோன்ற பாராட்டுகள் தான் தொடர்ந்து எழுத தூண்டுகொலாகிறது... மிக்க நன்றி அக்கா...

      Delete
  16. உங்களை பார்த்து தான் சிமிட்டிக்கொண்டிருந்தாங்களோ வண்ணத்துப்பூச்சி தான் தப்பா வந்திருக்கு.. ஹ ஹ நல்லா இருக்குப்பா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா...

      என்னைப்பார்த்துதான் சிமிட்டிக் கொண்டிருந்ததா! இருந்திருந்தால் மகிழ்ச்சி தான்...

      தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அக்கா...

      Delete
  17. வணக்கம் வெற்றி ....

    சொல்ல வந்த காதலை மிக தெளிவாக சொல்லாமல் போனது மாதிரியான உணர்வை தருகிறது ... படித்தவுடன் புரிகிற மாதிரி இருக்கவேண்டும் . இரண்டாம் தடவை படிக்கிற மாதிரி இருக்க கூடாது .. குறிப்பாக காதல் கவிதைகள் ...

    ReplyDelete
    Replies
    1. சரி அண்ணா, தங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன், இனி வரும் படைப்புகளில் எழுத முயற்ச்சிக்கிறேன்... மிக்க நன்றி அண்ணா...

      Delete
  18. :) இதுக்கு தான் இந்த பையன் த்ரிஷா படம் தேடிக்கிட்டு இருந்தானோ?? :)

    ReplyDelete
    Replies
    1. நண்பா, கவிதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க... திரிஷா படம் இதற்குத் தான் தேடினேன்...

      Delete
  19. Anonymous1:50:00 PM

    மிக நன்று காதல் படபடக்கிறது வண்ணத்துப் பூச்சியாக.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா...

      தங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  20. என்ன கவிதை.. என்ன ஒரு கவிதை..

    சூப்பரா இருக்குங்க...

    அதுவும் முதல் நான்கு வரி...

    சூப்பர்..


    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுப்புடு...

      தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...


      தங்கள் தளம் பார்த்தேன் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...